தன்னை பதவி நீக்கம் செய்யக் கோரி பல மாதங்களாக போராட்டங்கள் நடத்திய போதிலும், எஞ்சிய இரண்டு ஆண்டுகளை தனது பதவிக்காலத்தில் முடிப்பேன் என்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சிக்கலை, மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சரிசெய்வதில் கவனம் செலுத்துவதால் மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
"தோல்வியுற்ற ஜனாதிபதியாக என்னால் வெளியேற முடியாது" என்று அவர் இன்று (06) கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒரு நேர்காணலில் கூறினார்.
"எனக்கு ஐந்து வருடங்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை மீண்டும் போட்டியிட மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.