கடந்த ஜூன் 06 மற்றும் 09 ஆம் திகதிகளில் கோட்டை மற்றும் தலங்கமவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 09 சந்தேக நபர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரட்டா என்றழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன, வசந்த முதலிகே மற்றும் லஹிரு வீரசேகர உள்ளிட்ட 09 சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)