நடைமுறை மத்திய வங்கி ஆளுநராக கடமையாற்றும் கலாநிதி நந்தலால் வீரசிங்க மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராக எதிர்வரும் ஜூலை 04 ஆம் திகதி முதல் மேலும் ஆறு வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து நந்தலால் வீரசிங்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது.