பாகிஸ்தான் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தன்னுடைய செயல்பாட்டால் எதிரணிக்கு 5 ரன்கள் பெனால்டியைப் பெற்றுக் கொடுத்தார்.
பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 275 ரன்கள் குவித்தது. 276 என்ற இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.
இந்தப் போட்டியில் கேப்டன் பாபர் அசாமின் செயலால் அந்த அணிக்கு 5 பெனால்டி கொடுக்கப்பட்டது. அதாவது, போட்டியில் பாபர் பந்தைக் கையாளும்போது விக்கெட் கீப்பிங் கையுறைகளை பாபர் அசாம் அணிந்திருந்தே அதற்கு காரணம். விளையாட்டு விதிகளின்படி, இந்த செயலுக்காக பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு 5 ரன்கள் பெனால்டி வழங்கப்பட்டது.
மேற்கிந்திய தீவுகள் அணி 276 ரன்கள் இலக்கை துரத்தியபோது இரண்டாவது இன்னிங்ஸின் 29வது ஓவரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சமூக ஊடகங்களில் வெளிவந்த ஒரு வீடியோவில், பாபர் ஒற்றை விக்கெட் கீப்பிங் கையுறையை அணிந்து ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருந்து பந்தை சேகரிப்பதை காண முடிந்தது.
சர்வதேச கிரிக்கெட் சட்டம் 28.1ன் படி பாதுகாப்பு உபகரணங்களின்படி, 'விக்கெட் கீப்பரைத் தவிர வேறு எந்த ஃபீல்டரும் கையுறைகள் அல்லது வெளிப்புற லெக் கார்டுகளை அணிய அனுமதிக்கப்பட மாட்டார்கள். கூடுதலாக, கை அல்லது விரல்களுக்கான பாதுகாப்பை நடுவர்களின் ஒப்புதலுடன் மட்டுமே அணியலாம்.'
வெஸ்ட் இண்டீஸ் அணி 155 ரன்களில் ஆட்டமிழந்துவிட்டதால் பாகிஸ்தான் அணிக்கு இந்த பெனால்டியால் எவ்வித பாதிப்பும் இல்லை. ஒருவேளை போட்டி நெருக்கமாக இருந்திருந்தால் அந்த 5 ரன்கள் பாகிஸ்தானின் வெற்றியை பாதித்திருக்கக்கூடும்.