கல்வி அமைச்சு உள்ளிட்ட அரச ஊழியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (20ஆம் திகதி) முதல் இரண்டு வாரங்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த பரிந்துரை அத்தியாவசிய சேவைகளுக்கு பொருந்தாது என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தீரும் வரை இரண்டு வாரங்களிற்கு வீட்டிலிருந்து பணியாற்றும் நிலைமை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.