குறித்த சிறுமி கடந்த 30ஆம் திகதி காலை டியூஷன் வகுப்புக்கு சென்றிருந்த நிலையில், அவர் வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்கள் நெளுக்குளம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
எனினும் சிறுமியை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் இராணுவத்தினர் நேற்றைய முன்தினம் இரவு வரை கிணற்றை சோதனையிட்ட போது கிணற்றில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் சிறுமியின் சந்தேகத்திற்கு இடமான இரண்டு காலணிகள் காணப்பட்டன.
சிறுமியின் சடலம் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
எவ்வாறாயினும், மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கிணற்றில் தள்ளி விட்டார்களா என்பதை அறிய, சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)