2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் திகதி திங்கட்கிழமை அரச துறைக்கான விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட அமைச்சு, தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பொது போக்குவரத்து அமைப்பு மற்றும் அலுவலக செயல்பாடுகளை பராமரித்தல் தொடர்பான பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், ஜூன் 13ஆம் திகதி திங்கட்கிழமை அரச அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த அமைச்சு தீர்மானித்துள்ளது. (யாழ் நியூஸ்)