காலி முகத்திடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்த வந்தவர்களை தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதி தமக்கு உத்தரவிட்டதாக கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தரவை அமுல்படுத்துவதை நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தொலைபேசி மூலம் தமக்கு அறிவித்துள்ளதாக ஜாதிக நிதஹஸ் பெரமுனவின் தலைவர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் 'கண்டுகொள்ளாமல் இருக்குமாறு' அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
காலி முகத்திடல் சம்பவத்திற்கு முன்னர், ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய போராட்டத்தை கலைக்க தாக்குதல் நடாத்த முன்னர், போராட்டத்தின் தலைவர் ஒருவரை அடையாளம் கண்டு, அவருடன் கலந்துரையாடி, தாம் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுடன் கலந்துரையாடியதாகவும், அது பொலிஸ் சட்டங்களுக்கு அமைவாக இருந்ததாகவும் டி.ஐ.ஜி. மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)