BREAKING: பிரதமர் மஹிந்த இராஜானிமா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: பிரதமர் மஹிந்த இராஜானிமா!

 
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று (09) அறிவித்துள்ளார்.

நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் அவரது இராஜினாமா வந்துள்ளது.

இலங்கையில் நிலவும் நெருக்கடிகள் காரணமாக அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரியதாக முன்னைய செய்திகள் கூறப்பட்ட போதிலும், அந்த செய்திகளை மறுத்த பிரதமர், அவ்வாறான கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும், தான் பதவி விலகப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (SLPP) மற்றும் அதன் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் பல கலந்துரையாடல்களை அடுத்து, பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.