தாய்லாந்தில் உள்ள சியாம் எரிவாயு நிறுவனத்திடம் இருந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை (எல்பிஜி) கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தாய்லாந்து நிறுவனத்திடம் இருந்து 01 வருட காலத்திற்கு எல்பி கேஸ் கொள்வனவு செய்யப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எல்பிஜி கொள்வனவு செய்யப்பட வேண்டிய விலையானது, ஓமானில் இருந்து தற்போதைய வழங்குநரை விடவும் ஒரு மெட்ரிக் டொன்னுக்கு 09 அமெரிக்க டொலர்கள் குறைவாக காணப்படுகின்றது.
தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனம் இலங்கையின் வருடாந்தம் 70% எரிவாயு தேவையை வழங்கும் என அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் கடுமையான எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தேவையான எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு டொலர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)