நிதிக்குழுவின் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, அனைத்துக் கட்சிகளின் பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்கி, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிப்போம் என நம்புகிறோம் என்றார்.
பணம் மீதான முழு அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது எனவும் நிதிக்குழுவின் அனுமதியின்றி எந்தவொரு பணச் சட்டமூலத்தையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது எனவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், மக்கள் கருத்துக்கு மதிப்பளித்து பதவி விலகுவதற்கான காலவரையறையை ஜனாதிபதி அறிவிக்காத காரணத்தினால் தற்போது சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படாது எனவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)