மாவனல்லை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று வருடங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 சந்தேக நபர்களை சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் விடுதலை செய்யுமாறு மாவனல்லை நீதவான் தம்மிக்க ஹேமபால உத்தரவிட்டுள்ளார்.
சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த நாவனவின் பணிப்புரைக்கு அமைய சந்தேகநபர்கள் 14 பேரையும் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 46 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, சந்தேகநபர்கள் தலா ஒரு மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேலும் மூன்று சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)