ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
காலிமுகத்திடலில் ஈடுபட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொரட்டுவ மாநகர சபை ஊழியர் ஒருவரும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)