நுரைச்சோலியில் அமைந்துள்ள 270 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை பழுதுபார்க்கும் பணியைத் தொடங்கியுள்ளதாகவும், மேலும் 5 நாட்களுக்குள் மீண்டும் இணைக்கப்படும் என்றும், அனல் மற்றும் ஹைட்ரோ ஆலைகளைப் பயன்படுத்தி மின்வெட்டுகளை மேலும் நீட்டிக்காமல் நிர்வகிப்பதாகவும் உறுதியளித்தாக அமைச்சர் மேலும் தமது டிவீட் செய்தியில் தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)