இதில் என்ன நடக்கிறது என்றால், ஒரு வாகனம் பெட்ரோல் நிலையத்திற்கு எரிபொருள் நிரப்ப செல்லும்போது, அதன் பதிவு எண் சம்பந்தப்பட்ட தகவல் அந்த செயலியில் உள்ளிடப்படுகிறது.
இது ஏனைய எரிவாயு நிலைய உரிமையாளர்கள் வாகனத்தின் எரிபொருள் பயன்பாட்டை சரிபார்க்க உதவும்.
இந்த செயலியானது பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)