இதன்படி, கேகாலை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் நாளை வைத்தியசாலைக்கு முன்பாகவோ அல்லது அருகாமையில் போராட்டத்தை நடத்த உள்ளனர்.
மேலும், எதிர்வரும் நாட்களில் ஹம்பாந்தோட்டை, ஊவா, வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் செயலாளர் டொக்டர் செனல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மக்களின் கோரிக்கைகளை மீறி அரசியல் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தால், தற்போதைய நெருக்கடி தோல்வியடைந்த நிலைக்கு செல்வதை தடுக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)