இலங்கையின் அந்நிய செலவாணி வீழ்ச்சியை உத்தியோகபூர்வமாக அரசு வெளியிட்ட நாளிலிருந்து இலங்கை ரூபாயின் சர்வதேச ஒப்பீட்டளவிலான மதிப்பு வீழ்சியடையத் தொடங்கியது.
ரூபாயின் தலைகீழான வீழ்ச்சியின் போக்கு, இதனால் அதிகரித்த அரசு செலவீனம், அரச வருமானத்தில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி, போன்றவற்றால் அரசாங்கம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிப் போக்கை ஒப்பிடும்போது சுமார் 70 வருடங்களில் அச்சிட வேண்டிய பணத்தை ஒரு குறுகிய காலப்பகுதியில் அச்சிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக உள்நாட்டு பொருளாதார நிபுணர்கள் பலர் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக ஒரு வளர்ச்சி அடைந்துவரும் நாடு எதிர் நோக்கக் கூடாத பணவீக்கத்தை இலங்கை எதிர்கொண்டுள்ளது.
இந்த வகையில் தற்போதைய உலக பணவீக்கத்தினை அய்வு செய்யும் அமெரி்க்க நிபுணர் தனது ஆய்வில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் நிலையில் சிம்பேயும், இரண்டாம் நிலையில் லெபனானும், மூன்றாம் நிலையில் இலங்கையும் காணப்படுவதாக சர்வதேச பொருளாதார நிபுணரான ஸ்டீவ் ஹாங்க் தனது மாதாந்த பணவீக்க சுட்டெண் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதார ஆய்வில் மிகப் பழமை வாய்ந்த பல்கலைக்கழகமான அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹாங்க் தனது பொருளாதார ஆய்வில் இலங்கை சம்பந்தமான ஆய்வுகளில் பல எச்சரிக்கைகளை தெரிவித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கடன் மீளச் செலுத்துதல் மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் விலையேற்றம் எரிபொருள் இறக்குமதிக்கு ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை காரணமாக இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு உடநடியாக அனுபவமிக்க நாணய சபையொன்று நியமிக்கப்பட வேண்டுமெனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கையின் பணவீக்க விளக்கம் தொடர்பில் பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்க் தொடர்ச்சியான அவதானத்தை விளக்கியுள்ள படவரைபின் ஏற்றத்தை அவதானிக்கும்போது இலங்கையானது
கூடிய விரைவில் உலக பணவீக்கத்தில் முதல் இடத்தை எட்டுமா என்ற ஊகமும் எழுகின்றது.
-பேருவளை ஹில்மி