பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன மற்றும் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோர் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
மருந்து தட்டுப்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம் உரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து உரையாற்றவுள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தொடர்பான பிரச்சினைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்கவினால் பேசப்படும்.
ஐ.தே.க உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளுடன் தேவையான கலந்துரையாடல்களை நடத்தி, பிரச்சினைகளைக் கண்டறிவதுடன், பிரதமருக்கு அறிக்கையொன்றின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவார்கள். (யாழ் நியூஸ்)