கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நன்மை கருதி மின் விநியோத்தடை நேரத்தில் மாற்றம் செய்ய தீர்மானித்துள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 22 ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளில் மின் விநியோகத்தடையினை மேற்கொள்ளாதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி வரையிலான காலப்பகுதியில் மாலை 6.30 இற்கு பின்னர் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்கள் அல்லது இரண்டு மணித்தியாலம் 15 நிமிடங்கள் வரையிலான மின்விநியோகத் தடையானது நண்பகல் முதல் மாலை 6.30 வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.