அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக இன்று (20) ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளாமல், அரசாங்கத்தின் நற்செயல்களுக்கு எதிர்க்கட்சியில் இருந்து சாதகமான பங்களிப்பை வழங்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா மற்றும் காணி அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக மனுஷ நாணயக்காரவும் இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். (யாழ் நியூஸ்)