ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் மே மாத இறுதி வரை மட்டுமே எரிபொருள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய திகதிக்கு பிறகு எரிபொருள் நிரப்பும் திட்டம் குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார்.
எரிபொருள் வழங்கப்படுவதாக தெரிவித்த போதிலும் அது தொடர்பில் இதுவரை விமான நிலையம் மூடப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து, கட்டுநாயக்காவை வந்தடையும் பல விமான நிறுவனங்கள் ஏற்கனவே எரிபொருள் நிரப்புவதற்காக இந்தியாவின் சென்னைக்கு செல்ல ஆரம்பித்துள்ளன. (யாழ் நியூஸ்)