நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடியில் இருந்து தமிழ் அரசியல் கட்சிகள் தேவையற்ற ஆதாயங்களைப் பெற முயற்சிக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை அரசியல் கட்சிகள் அதிகாரத்துக்காக கடும் சண்டையில் ஈடுபட்டு நாடு கொந்தளித்து வரும் இவ்வேளையில் தமிழ் அரசியல் கட்சிகள் அற்ப அரசியலில் ஈடுபடாது என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
நாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் நிகழ்வுகளும் அரசியல் தீர்மானங்களும் ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு என்பவற்றுக்கு அமைவாக அமைய வேண்டும் எனவும், போராட்டத்தின் போது கொலைகள், தீ வைப்பு, சொத்து சேதம் என்பன இடம்பெறக்கூடாது எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் தென்னிலங்கை மக்களால் மாபெரும் மாவீரர் எனப் போற்றப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, தற்போது அவரைப் போற்றிய மக்களாலேயே பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் வெற்றி பெற்ற போது தலைமைப் பொறுப்பில் இருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கே தமிழ் மக்கள் வாக்களித்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்கள் விரும்புவது தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அரசியல் கட்டமைப்பையே விரும்புகின்றனர்.
எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் ஒருபோதும் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)