ஜப்பானில் முதியோர் பராமரிப்பு மற்றும் கேட்டரிங் துறையில் 350,000 க்கும் மேற்பட்ட வேலை காலியிடங்கள் உள்ளன என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் ஜப்பானிய மொழி அறிவு கட்டாயமாகும்.
இதனையடுத்து, தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை, தொழிற்பயிற்சி அதிகார சபை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உள்ளிட்ட தனியார் மற்றும் அரச துறைகளின் பங்களிப்புடன் ஜப்பானிய மொழித் திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
திறமையான பணியாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சந்தைகளுக்கு அழைத்துச் செல்லும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக நேற்று (25) முற்பகல் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதாரப் பின்னடைவுக்கு முகங்கொடுத்து, அந்நிய செலாவணியை உருவாக்கி வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை கைப்பற்றுவதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)