இந்நிலையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துமூல அனுமதியின்றி பொதுச்சாலை, தொடருந்து பாதை, பொதுப்பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லையென ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.