நாட்டைக் கட்டியெழுப்ப ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி பதவி வழங்கப்பட வேண்டுமென அவர் கூறுகிறார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் இணைய சேனலுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பாத்திரத்தை விமர்சித்த பாலித ரங்கே பண்டார, பெருவிரலில் இருந்து தலை உச்சி வரை செல்வது சஜித் பிரேமதாசவின் முட்டாள்தனம் மட்டுமே இருக்கிரது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடிக்கு ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்திய சஜித் பிரேமதாசவே காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். (யாழ் நியூஸ்)