ஒன்பதாம் திகதி அலரி மாளிகையில் மஹிந்த ராஜபக்ச ஏற்பாடு செய்த பேரணியில் வன்முறை தூண்டப்பட்டது என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள முஜிபூர் ரஹ்மான் அந்த பேரணியில் கலந்துகொண்ட குண்டர்கள் நாமல் ராஜபக்சவுடன் செல்பி எடுத்துக்கொண்டனர், மேலும் காலிமுகத்திடலிற்கு செல்லும் பேரணிக்கு அவரை தலைமை தாங்குமாறு கேட்டுக்கொண்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரை படையினரை பயன்படுத்தி நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சரும் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் அவ்வாறான வன்முறைகள் இடம்பெறுவதற்கு ஜனாதிபதியும் இடமளித்தாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிகாரம் இருந்தபோதிலும் அவர்கள் வீடுகளை பாதுகாக்க தவறினார்கள் மெதமுலானவில் ஜனாதிபதியின் மூதாதையர் இல்லத்தை கூட காப்பாற்றமுடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.