தரவுத்தளத்தில் ஏற்பட்டுள்ள சீர்கேடு காரணமாக நாடளாவிய ரீதியில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ் நகல்களை வழங்கும் நடவடிக்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது.
மறுசீரமைப்புக்குப் பணிகள் நடைபெற்று வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மறுசீரமைப்புக்குப் பிறகு இது தொடர்பான அறிவிப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)