பெந்தோட்டை சாதாரண மக்களைப் பாதிக்கும் போராட்டங்களை இங்கு தொடர அனுமதிக்கப் போவதில்லை என பெந்தோட்டை பிரதேச சபையின் பொதுஜம பெரமுன (மொட்டு சின்னம்) உறுப்பினர் சமில ஜயசேகர பெந்தோட்டையில் தெரிவித்துள்ளார்.
பெந்தோட்டை நகரம் மற்றும் பெந்தர பாலத்தின் இருபுறங்களிலும் ஹர்த்தால் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் கட்டியிருந்த கறுப்புக் கொடிகளை அகற்றிய பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் இக்கட்டான நிலையில் உள்ளதை ஒப்புக்கொண்ட அவர், நாட்டு மக்களையும் பொதுமக்களையும் பாதிக்கும் ஹர்த்தால் மற்றும் வீதிகளை மூடுவது போன்ற செயற்பாடுகளை நடத்துவதை தாம் ஏற்கமாட்டேன் எனவும், எதிர்காலத்தில் ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பெந்தர எதிர்ப்பு ஹர்த்தால்களை நடத்த அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.
மேலும் பெந்தோட்டை பாலத்தின் இருபுறமும் இருந்த கறுப்புக்கொடிகளை அகற்றி பெந்தோட்டை ஆற்றில் வீசி எறிந்தனர்.
இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அந்த இடத்தில் ஒரு குழு மீண்டும் கருப்புக் கொடிகளைக் காட்டியதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)