இலங்கையர்கள் கையில் வைத்திருக்கக் கூடிய அதிகபட்ச வெளிநாட்டு நாணய பெறுமதியில் மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையர்கள் கையில் வைத்திருக்கக் கூடிய அதிகபட்ச வெளிநாட்டு நாணய பெறுமதியில் மாற்றம்!


இலங்கையர்கள் தமது கையில் பணமாக வைத்திருக்கக்கூடிய ஆகக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, மேலதிகமாக வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயங்களை வங்கியின் வெளிநாட்டுக்கணக்கில் வைப்புச் செய்வதற்கோ அல்லது அவற்றை ரூபாவாக மாற்றுவதற்கோ இருவார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேற்கண்டவாறு மேலதிக வெளிநாட்டு நாணயத்தை வங்கியில் வைப்புச் செய்யாமல் கைகளில் வைத்திருப்பவர்கள், அந்த பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதைத் தெளிவுபடுத்துவதற்கும் இரு வார கால அவகாசம் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவாரத்தின் பின்னர் உரிய அளவை காட்டிலும் மேலதிகமாக வெளிநாட்டு நாணயத்தை கைகளில் வைத்திருப்பவர்களிடம் அபராதம் அறவிடப்படும் என்றும், அது அவர்கள் கையில் வைத்திருக்கும் தொகையை விடவும் அதிகமானதாக இருக்கலாம் என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.