நாட்டின் பல பகுதிகளில் இன்று (01) பிற்பகல் வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் புத்தளம், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.
ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.