நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களை பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எரிபொருள் எடுக்க வரும் மக்கள் கலவரமாக நடந்து கொள்வதால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, தேவையான எரிபொருள் விநியோகம் கிடைக்கும் வரை எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த அனுமதி கோரியுள்ளனர். (யாழ் நியூஸ்)