இதன்படி, பெறுமதி சேர் வரியை (VAT) 8% இல் இருந்து 12% ஆக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதன் மூலம் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அடுத்ததாக, தொலைத்தொடர்பு வரியை 11.25% லிருந்து 15% ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சட்டத் திருத்தத்திற்கு உட்பட்டு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் கடிதம் வௌியிடுவதன் ஊடாக இது அமல்படுத்தப்பட உள்ளது.
இதேவேளை, தனிநபர் வருமான வரிச் சலுகையை மூன்று மில்லியன் ரூபாவில் இருந்து 1.8 மில்லியன் ரூபா வரை குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது