இன்னும் சில நாட்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என எஞ்சிய நிறுவனங்களின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்காலத்தில் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எரிபொருள் போக்குவரத்து பௌசர் உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாகவே தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கைக்கு டீசல் இறக்குமதி செய்யப்படும் வரை போதியளவு டீசல் கையிருப்பு இல்லாததால் வரவிருக்கும் எரிபொருள் தட்டுபாடு ஏற்பட உள்ளது.
மேலும் அனல் மின் நிலையங்களுக்கும் எரிபொருள் நிரப்ப வேண்டியிருப்பதால், போக்குவரத்துக்கு டீசல் பெறுவதில் இந்த நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.
சுமார் இன்னும் இரண்டு வாரங்களில் டீசல் கப்பல் ஒன்று மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)