அரச உத்தியோகத்தர்களின் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள போராட்டம் காரணமாக திணைக்களத்தின் உள்ளக ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க மாட்டோம் என அறிவித்துள்ளதாக குறிப்பிட்டு ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்று ஒரு நாள் சேவைக்காக முன்பதிவு செய்துள்ளவர்கள் அரசாங்கத்தின் மற்றுமொரு வேலை நாளில் வந்து சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை உள்ளிட்ட பொதுச் சேவைகள் இன்றைய தினம் இயங்காது என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.