2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, 2020 ஆம் ஆண்டு தேர்வு முடிவுகள் மீளாய்வுக்கு 32,528 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மீளாய்வு முடிவுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளுக்காக பல விசேட தொலைபேசி இலக்கங்களும் இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.
பாடசாலை தேர்வு நிறுவனங்கள் மற்றும் முடிவுகள் கிளையின் தொலைபேசி எண்கள் கீழே உள்ளன.
011 2784537/011 2784208/011 3188350/011 3140314