சிறிலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் பிரேரிக்கப்பட்ட ரஞ்சித் சியாம்பலபிட்டியை ஐக்கிய மக்கள் சக்தியும் ஆதரித்தது. அவருக்கு ஆதரவாக 148 வாக்குகள் அளிக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் முன்மொழியப்பட்ட இம்தியாஸ் பாக்கீர் மார்க்காருக்கு ஆதரவாக 65 வாக்குகள் அளிக்கப்பட்டன. மேலும் 03 வாக்குகள் நிராகரிப்பட்டன.
பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பு காலை 10.45 மணிக்கு ஆரம்பித்தது. மதியம் 12.30 மணிக்கு நிறைவடைந்தது.
வாக்கெடுப்பில் இரா.சம்பந்தன், விமல் வீரவன்ச உள்ளிட்ட 06 எம்.பிக்கள் கலந்து கொள்ளவில்லை.