கொம்பனிவீதி பொலிஸாரால் இன்று (30) மாலை கைது செய்யப்பட்டிருந்த அவரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 25ஆம் திகதி கோட்டை நீதிமன்றத்துக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், வாக்குமூலம் வழங்குவதற்காகவே கொம்பனிவீதி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்த அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.