மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராகும் எண்ணம் தமக்கு இல்லை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநரான கலாநிதி நந்தலால் வீரசிங்க, இந்த இக்கட்டான நேரத்தில் மத்திய வங்கியின் ஆளுநராக முக்கியப் பங்காற்றுகிறார் என கலாநிதி குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் தற்போதைய ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்படுவார் என்ற வதந்திகள் தொடர்பிலான கேள்விக்கு பதிலளித்தபோதே கலாநிதி குமாரசுவாமி மேற்கண்டவாறு கூறினார். (யாழ் நியூஸ்)