இலங்கையர்களுக்கு இந்திய வீசா வழங்கப்படமாட்டாதா? - இந்திய உயர்ஸ்தானி காரியாலயம் விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையர்களுக்கு இந்திய வீசா வழங்கப்படமாட்டாதா? - இந்திய உயர்ஸ்தானி காரியாலயம் விளக்கம்!

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானி காரியாலயம் இலங்கையர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியதா என்பது தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானி காரியாலயம் அல்லது இலங்கையில் உள்ள இந்திய துணை தூதரகம் அல்லது இந்திய உதவி உயர்ஸ்தானி காரியாலயம் விசா வழங்குவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர் ஸ்தானிகராலயம் கடந்த சில நாட்களாக, அதன் விசா பிரிவு ஊழியர்கள், அவர்களில் பெரும்பாலானோர் இலங்கை பிரஜைகள், அலுவலகத்திற்கு வர இயலாமை காரணமாக செயற்பாடுகளில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எங்களது செயல்பாடுகளை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சித்து வருகிறோம் என இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான இலங்கையர்களின் பயணத்தை எளிதாக்குவதற்கு தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் இராஜதந்திர தூதரகம் உறுதியளித்துள்ளது.

“இந்தியர்கள் இலங்கையில் இருப்பதைப் போலவே இலங்கையர்களும் இந்தியாவில் வரவேற்கப்படுகிறார்கள்” என்று உயர்ஸ்தானிகர் மேலும் கூறினார்.

இலங்கையர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்தியதா என பல சமூக ஊடக பயனர்கள் கேள்வி எழுப்பியதை அடுத்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டது.

நாட்டில் நிலவும் அமைதியின்மை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என சமூக ஊடக பயனர்கள் ஊகித்திருந்தனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.