ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் தம்மைப் பார்த்து அச்சமடைந்துள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பலனாக நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் தனக்கு பாதுகாப்பு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அதற்காகவே மைத்திரிபால சிறிசேனவுக்கு சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளதாக அவர் கூறுகிறார்.
இணைய சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் தமக்குக் கிடைக்கும் என்று கூறியுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஊழல்வாதிகளுக்கு எவ்வாறு தண்டனை வழங்குவது என்பது தொடர்பிலான விபரங்களையும் வெளியிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)