50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாளை முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெற்றிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமானதால் சமையல் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படாமல் இருந்தது.
எனினும் 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இதனையடுத்தே 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாளை முதல் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்ததாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.