அரசாங்க வருமானத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக பல விசேட வரிகளை பாராளுமன்றத்தின் அங்கிகாரத்துக்காக விரைவில் முன்வைக்கவுள்ளதாக நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
விசேடமாக நிறுத்தி வைத்தல் அல்லது தடுத்து வைத்தல் வரி மற்றும் வருமானம் பெறும் போது செலுத்தும் வரி ஆகியவை உள்ளடங்கும் என்றும் அவை கட்டாயமானவை என்றும் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வெற்றி பெறும் என்றும் அவர்களிடமிருந்து ஆரம்பக் கடனைப் பெற குறைந்தது ஆறு மாதங்களாகும் என்றும் குறிப்பிட்டார்.