களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் வீட்டிற்கு முன்பாக “கப்புட்டு காக் காக்” என கூச்சலிட்ட குற்றச்சாட்டின் பேரில் களுத்துறை மாவட்டச் செயலாளரால் பத்து பாடசாலை மாணவர்கள் மீது தடியினால் தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அங்குருவாதொட்ட பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்புச் செயலாளராக இருப்பவர் பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை மாணவர்கள் வெசாக் பண்டிகையை அனுசரிக்கச் சென்றிருந்த வேளையில் வீட்டின் முன் “கப்புட்டு காக் காக்” என்று கூச்சலிட்டமையினால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரு தரப்பினரும் பொலிஸில் முறைப்பாடு செய்ததைக் கேட்டறிந்த பின்னர், இரு தரப்பினருக்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)