குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 09ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சனத் நிஷாந்த உள்ளிட்ட 22 பேரை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் நேற்றைய தினம் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.