காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் ஒருவரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
43 வயதான சந்தேகநபர் ஹோகந்தர பிரதேசத்தில் மறைந்திருந்த போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஏனைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுடன் ஸ்கூட்டரில் காலி முகத்திடலுக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மிரிஹான போராட்டத்தின் போது, பின்னர் எரிக்கப்பட்ட இராணுவ பேருந்தை ஓட்டிச்சென்று ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முன்னால் நிறுத்தியதாக நம்பப்படுவதாகவும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்த நபர் போராட்டக்காரர்களுக்கு எதிராக பேசியதையும் அவதானிக்க முடிந்தது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)
காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொலிஸ் மா அதிபர், விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி மற்றும் பொலிஸ் விசேட பணியகத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.