ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீரென பதவி விலகினால் ஏற்படக் கூடிய சூழ்நிலை குறித்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார்.
“அவர்கள் ஜனாதிபதியை இராஜினாமா செய்யச் சொல்கிறார்கள். அந்த பிரச்சனை தீர்ந்தால் அடுத்த பிரச்சனை என்னவாக இருக்கும்? அவர் இராஜினாமா செய்தால் என்ன நடக்கும்? இன்று பாராளுமன்றத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் பெரும்பான்மை பலம் உள்ளது. ஜனாதிபதி பாராளுமன்றத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களை கட்டுப்படுத்துவது பசில் ராஜபக்சவே எனவும், தற்போதைய ஜனாதிபதி பதவி விலகினால் பசில் ராஜபக்ச ஜனாதிபதியாக முடியும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார். (யாழ் நியூஸ்)