காலிமுகத்திடல் அமைதிப் போராட்டம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் இன்று (18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (17) பிற்பகல் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் கைது செய்தனர்.
இதேவேளை, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வந்து வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)