தற்போதைய நிலைமைக்கு ஏற்ப அரசாங்கத்திற்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச கடன் தொகையை எட்டியுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் 2.9 ட்ரில்லியன் மட்டுமே கடனாகப் பெற முடியும் எனவும் அந்த வரம்பை நான்கு ட்ரில்லியன்களாக அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடன் வரம்பை அதிகரிக்காவிட்டால் அடுத்த மாதம் முதல் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பணம் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், கடன் வரம்பை அதிகரிப்பதற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் தேவைப்பட்ட போதிலும், அரசாங்கம் தற்போது அவ்வாறு செய்ய முடியாத நிலையில் இருப்பதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)