ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் எரிபொருள் நிலையங்களுக்கு இனி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களால் பல சந்தர்ப்பங்களில் மோதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.