இதற்கமைய, நாளை மற்றும் நாளை மறுதினம் A முதல் L மற்றும் P முதல் W வரையான வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
எனினும், நாளை காலை 6.00 மணியுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் மின்வெட்டு அமுலாகும் நேரம் 5 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.